வடக்கு ஆளுநர் செயலகத்தில் கைகலப்பு

0
116

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வடமாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தின் அலுவலக பணியாளர் ஒருவருடன், துப்பரவுப் பணியில் ஈடுபடும் நபர்  ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட ஆளுநர் செயலக பணியாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.