வடக்கு, கிழக்கில் இந்தியா முதலீடு! திட்டங்களை தருமாறு கூட்டமைப்பிடமும் கோரிக்கை!!

0
178

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்தியா பெருமுதலீடுகளை ஆரம்பிக்கவுள்ளது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதவை வழங்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கேட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை கொழும்பு இந்திய இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்துப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், இந்த முதலீடுகள் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு நன்மைகளை தரும் என்று உறுதியளித்தார். அத்துடன், தமிழ் மக்களுக்கு பயன்படக்கூடிய – தேவையான முதலீட்டு திட்டங்களை தருமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கோரியிருந்தார்.