வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சீனாவின் முதலீட்டால் வலுப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடரும் என்று சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
வடக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் குறித்து சீன முதலீட்டாளர்கள் எடுத்த தீர்மானம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தூதுவர்,
“சீனாவும் இந்தியாவும் ஆசியப் பிராந்தியத்தில் பொருளாதார வல்லரசுகளாக உள்ளன. இதனாலேயே இலங்கையில் முதலீடு செய்ய முனைகின்றன. இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளில் எந்தவொரு நாட்டுடனும் போட்டியை ஏற்படுத்துவது சீன அரசாங்கத்தின் கொள்கை அல்ல”, என்றார்.
யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதிகளில் சீனா சூரியசக்தி மின் உற்பத்தியை ஆரம்பித்தது. ஆனால், இந்த நடவடிக்கை இடையிலேயே நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.