வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர், யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக, இன்று, யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவரை சந்தித்து, மகஜர் கையளித்துள்ளனர். இதன் போது, தமிழ்; மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வாக, சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு, அனைத்து தமிழ் தரப்புக்களும் ஓரணியில் திரள வேண்டும் என்பதை, இந்திய துணைத் தூதுவரிடம் வலியுறுத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தைக்கு, இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்தனர்.