வடக்கு மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மழை பெய்யும்

0
71

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவான ‘ஃபெங்கால்’ என்ற சூறாவளி புயல் நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே 360 கிலோமீற்றர் தொலைவிலும், காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டது.

இது இன்று பிற்பகலில் ஒரு சூறாவளி புயலாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இன்றைய தினத்தின் பின்னர் மழையுடனான காலநிலை படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் னவும், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மேல், வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை பெய்யும் எனவும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.