வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட நிர்வாக அதிகாரிகள் சிலருக்கு இடமாற்ற உத்தரவுகள் ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் கல்வி அமைச்சின் மூத்த உதவிச் செயலராகவும், உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராக பதவி வகித்த மு.நந்தகோபாலன் கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி தேவநந்தினி பாபு கூட்டுறவு ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளராக செ.பிரணவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 24ஆம் திகதியிலிருந்து இடமாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.