வடக்கு விவசாயிகளின் மின்கட்டணத்தை குறைக்க ஏற்பாடு

0
109

வடக்கு விவசாயிகளின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு, விவசாயத்திற்கான மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு, அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக, விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயம் தொடர்பில், வட பகுதி விவசாயிகள் காண்பிக்கும் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

விவசாய அமைச்சிற்கு ஒதுக்கப்படும் நிதியில், அதிகளவான நிதியை, வடக்கு கிழக்கு அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்குமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

30 வருட கால யுத்தத்தினால், வட பகுதி மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர்.

ஆனால், இந்த நெருக்கடிகளின் மத்தியிலும், அவர்கள் விவசாயத்தை கைவிடவில்லை.

வட பகுதி விவசாயிகள், மின்சாரக் கட்டண நிவாரணத்தை கோரியுள்ளனர்.
அதற்கமைவாக, அவர்களின் மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளேன்.

என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.