யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில், அடையாளங் காணப்படாத நிலையிலிருந்த மூன்று சடலங்கள் இன்று அரச செலவில் மந்திகை கருகம்பன் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வடமராட்சி கடற்பரப்பில் இனம் தெரியாத ஐந்து சடலங்கள் கரை ஒதுங்கியிருந்தன. இதில் மூன்று சடலங்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும், இரண்டு சடலங்கள் கிளிநொச்சி வைத்திய சாலையிலும் வைக்கப்பட்டிருந்தன. பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் இருந்த மூன்று சடலங்களும் ஆறு மாதங்கள் கடந்தும் யாரும் உரிமை கோரப்படாமலிருந்த நிலையிலும், இடப்பற்றாக்குறை மற்றும் பராமரிக்க முடியாத காரணத்தினாலும் பருத்தித்துறை நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய அரச செலவில் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.