வட்டுக்கோட்டையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
165

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்போது உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவியும் கௌரவிக்கப்பட்டார். சரவணபவனிடம் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கைக்கு அமைவாக ஆரம்ப கல்வி பாடசாலை மாணவனர்களுக்கு இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்பொழுது இம்முறை வெளியான க.பொ.த உயர்தரபரீட்சையில் 3 ஏ சித்திகளை பெற்று சட்டபீடத்திற்கு தெரிவான துணைவி பகுதியைச் சேர்ந்த தர்மினி நித்தியானந்தனும் கௌரவிக்கப்பட்டார் இதன் பொழுது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வலிதென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் அனுசன், ஆசிரியர் பிரதாப், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.