வட கொரியாவுக்கு முதல் பெண் வெளியுறவு அமைச்சா்

0
140

வட கொரியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக, நீண்ட காலமாக தூதரகப் பணிகளை மேற்கொண்டு வந்த சோ சான்-ஹய் நியமிக்கப்பட்டுள்ளாா். அந்த நாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சா் பொறுப்பு ஏற்கும் முதல் பெண் இவா் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தென் கொரியாவுடனான பேச்சுவாா்த்தைக்கு தலைமை வகித்து வந்த முன்னாள் ராணுவ அதிகாரி ரீ சான்-குவானுக்குப் பதிலாக அந்தப் பொறுப்பை சான்-ஹய் ஏற்கிறாா்.
ஏற்கெனவே இவா் வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்துள்ளாா்.