வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுத்தல் தொடர்பில், இளைஞர்-யுவதிகளுக்கு செயலமர்வு

0
73

வன்முறை தீவிர வாதத்தை தடுக்க இளைஞர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தல் தொடர்பாக தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை இளைஞர்,யுவதிகளுக்கான
இரண்டு நாள் செயலமர்வு மட்டக்களப்பு ஏறாவூர் பயிலுநர் பயிற்சி மையத்தில் நடைபெறுகின்றது.
மாவட்ட செயலத்துடன் இணைந்து மாவட்டத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான லிப்ட் நிறுவனம், மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வருகின்ற செயற்றிட்;டத்தின்
ஒரு திட்டமாக பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ,இளைஞர் யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையை வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல் தொடர்பான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
எல் விடாஸ் நிறுவனத்தின் நிதி உதவியில் லிப்ட் நிறுவனத்தின் அனுசரணையில் நிறுவன பணிப்பாளர் ஜானு முரளிதரன் தலைமையில் இச் செயலமர்வு நடைபெறுகிறது.
செயலமர்வில் லிப்ட் நிறுவனத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.