வரலாறு காணாத சரிவை நோக்கி உலக பங்குச்சந்தை!

0
10

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.

ட்ரம்பின்  வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீனா ட்ரம்பின்  வரிவிதிப்புக்கு எதிர் வரிவிதிப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரி விதித்தது.

ட்ரம்ப் தொடங்கியுள்ள வர்த்தக போரால் உலக பங்குச்சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்படத் தொடங்கி உள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் எலான் மஸ்க் உள்ளிட்ட உலகின் முதல் 500 பணக்காரர்கள் ஒட்டுமொத்தமாக 208 பில்லியன் டொலர்களை இழந்தனர்.

இந்த நிலை தொடர்ந்தால் 1987 க்கு பின் நிகழும் மிகப்பெரிய பங்குச்சந்தை சரிவாக அமையும். ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று பங்குச்சந்தை சரிவு கடுமையாக உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

சிங்கப்பூரின் பங்குகள் இன்று சந்தை தொடக்கத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன.

இந்நிலையில் அமெரிக்க மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட கூர்மையான சரிவுகள், தனது வர்த்தக வரிகள் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

 இதேவேளை தனது சொந்த சமூக ஊடகமான  ட்ரூத் சோசியலில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளுடன் நமக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது.

 இந்தப் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி, வரி விதிப்புக்கள் மட்டுமே.

இவை இப்போது அமெரிக்காவிற்கு பல பில்லியன் டொலர்களை கொண்டு வருகின்றன. அவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. அமெரிக்காவிற்கான வரி விதிப்புகள் மிகவும் அழகான விஷயம் என்பதை ஒரு நாள் மக்கள் உணர்வார்கள். என்று பதிவிட்டுள்ளார்.