வரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

0
14

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

நாட்டின் அடுத்தக்கட்ட அபிவிருத்தி இலக்கியை நிறைவேற்றும் வகையிலான முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன்,அனைத்து தரப்பினரையும் பொருளாதார நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளும் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் இம்முறை விசேட அவதானம் செலுத்தப்படவில்லை.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள்,வைத்தியர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், கைத்தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்துறைகளை சார்ந்தவர்கள் வரவு செலவுத் திட்டத்தில் கூடிய அவதானம் செலுத்தியுள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காக 2025.01.09 ஆம் திகதியன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அதாவது வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி, திட்டமிட்டல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்ற அமைச்சர் என்ற அடிப்படையில் இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் 2025.01.01 ஆம் திகதி முதல் 2025.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு அரச செலவினமாக 4,218 பில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு அரச செலவினமாக 6,978 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அரச செலவினம் 2760 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி ஆகிய துறைகளுக்கு கடந்த காலங்களை காட்டிலும் கணிசமான அளவு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்களின் சம்பளம் கணிசமான அளவு அதிகரிக்கப்படுவதுடன், தனியார்துறையினரின் சம்பளத்தை நிறுவன கட்டமைப்பின் ஊடாக அதிகரித்துக் கொள்ளும் மூலோபாய திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளன.

நாட்டின் அடுத்தக்கட்ட அபிவிருத்தி இலக்கியை நிறைவேற்றும் வகையிலான முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன்,அனைத்து தரப்பினரையும் பொருளாதார நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளும் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு இம்முறை விசேட அவதானம் செலுத்தப்படவில்லை.

இதற்கமைய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வரை 7 நாட்கள் நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி (வியாழக்கிழமை) ஆரம்பமாகி,மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.