இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 83ஆவது சரத்தின் பத்தி (ஆ) குறிப்பிட்டப்பட்டுள்ள ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களை ஒப்புதலாக கொண்டு 83ஆவது சரத்தின் பத்தி (ஆ)சரத்தை திருத்தம் செய்வது தொடர்பில் 09 ஆம் திகதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கொள்கைக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணையை வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.