நாட்டில் நிலவிய கடுமையான வெப்பநிலையால் பல பகுதிகளுக்கான நீர் விநியோகத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய நாட்களில் அதிக நுகர்வு காரணமாக, இடைக்கிடையே குறைந்த அழுத்த நிலைகளில் நீரை விநியோகிக்க வேண்டியுள்ளதாகவும் அதிக உயரமான பகுதிகளில் நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு, கண்டி, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சில நீர் மூலங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய அன்றாட தேவைக்கு மாத்திரம் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது பல பகுதிகளுக்கு தாங்கி ஊர்திகள் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.