வற் வரியில் அடுத்த வருடம் பாரிய அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த தகவல்

0
107

இவ்வருடத்துடன் ஒப்பிடுகையில், அடுத்த வருடம் செலுத்தப்பட வேண்டிய வற் வரி தொகையானது பெரும் அதிகரிப்பை கொண்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2023ஆம் ஆண்டில் 04 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 9ஆயிரத்து 941 ரூபாவை வற் வரியாக செலுத்தி வருகின்றது. 2024ஆம் ஆண்டில் 04 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 20ஆயிரத்து 467 ரூபாவை வற் வரியாக செலுத்த வேண்டும்.

இதன்படி இவ்வருடத்துடன் ஒப்பிடுகையில், அடுத்த வருடம் செலுத்தப்பட வேண்டிய வற் வரி தொகையானது 105 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.