இஸ்ரேலிற்கான ஆயுதவிற்பனையை நிறுத்தமாட்டேன் என அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
சிஎன்என்னிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடன் போன்று இஸ்ரேலிற்கான வலுவான ஆதரவை பேட்டியில் வெளியிட்டுள்ள கமலா ஹரிஸ் காஸாவில் பெருமளவு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதன் காரணமாக அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தவேண்டும் என ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் சிலர் விடுத்துள்ள வேண்டுகோளை நிராகரித்துள்ளார்.
நான் வலுவான இஸ்ரேலை ஆதரிக்கின்றேன் என தெரிவித்துள்ள எனினும் காசா மோதலில் யுத்தநிறுத்தத்தை சாதகமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் விடுதலையை சாத்தியமாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.