வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். வவுனியா மாவட்டத்தில் நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் நேற்று மாலை முதல் மழை பெய்து வந்தது. வவுனியா மாவட்டத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவிய வேளையில் மழை பொழிந்தமையினால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்வடைந்துள்ளனர். நீண்டகாலம் கடும் வெயிலுடன் கூடிய காலநிலை நிலவி வந்த சூழ்நிலையில் தற்போது மழை பெய்துள்ளமை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.