வவுனியாவில் கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

0
166

ஹற்றன் நசனல் வங்கியின் ‘உங்களுக்காகவே நாம்’ போஷாக்குத் திட்டத்தின் மூலம் வவுனியாவில் கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வங்கியின் பிராந்தியப் பொறுப்பதிகாரி ந.கருணைராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் கர்ப்பிணித்தாய்மார் பின்பற்றவேண்டிய உணவுப் பழக்கவழக்கங்கள் தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து தாய்மாருக்கான சத்துணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் பிரியதர்சினி சயீவன், வைத்தியர் ஜெயதரன், ஹற்றன் நசனல் வங்கியின் கிளை முகாமையாளர் எஸ்.சுரேஸ்குமார், சுகாதார வைத்திய அதிகாரி யூட் பீரிஸ், கிராம சேவகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.