வவுனியாவில் பல பகுதிகளை பார்த்தீனிய களை ஆக்கிரமித்துள்ளது. நகர் பகுதிகள், வீதியோரங்கள், புகையிரத பாதைகளுக்கு அருகாமையுள்ள பகுதிகள், விவசாய நிலங்கள் என பல இடங்களில் பார்த்தீனிய செடி காணப்படுகின்றது. விவசாயத்துறைக்கு அதிகளவில் கேடு விளைவிக்கும் தாவரமாக பார்த்தீனியம் காணப்படுகின்றது. விவசாயப் பயிர்களை அழித்து ஆக்கிரமித்து வளரக்கூடிய தன்மையுள்ளமையால், இந்த களை பரவும் இடத்தில் பயிர்செய்கை செய்ய முடியாதுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர். பார்த்தீனியக் களை பரவுவதைத் தடுப்பதற்கு கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அச்செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படாமையினாலே தற்போது இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.