வவுனியாவில் பால்புதுமையினர் நடைபவனி

0
71

பால்புதுமையினர் தங்களது உரிமைகளை வலியுறுத்தி, தங்களையும் சக மனிதர்களாக எண்ண வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து நேற்று வவுனியாவில் நடைபவனியொன்றை முன்னெடுத்தனர்.

இந்த நடைபவனி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சென்றடைந்ததோடு நிறைவு பெற்றது.

‘யாழ். சங்கம்’ என்ற பால்புதுமையினத்தவர்களுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நடைபவனியில் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர். 

இந்த நடைபவனியில் தமது உரிமைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகள் கொண்ட மனிதப் பிறப்புக்களே என்பது போன்ற கருத்துக்கள் பால்புதுமையினர் இதன்போது முன்வைத்திருந்தனர்.