வவுனியா – செட்டிகுளம் பகுதியில் புதையில் தோண்ட பயன்படும் ஸ்கனார் இயந்திரத்துடன், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிசார் தெரிவித்தனர். செட்டிகுளம் பகுதியில் நேற்று விசேட சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினர் சந்தேகத்திற்கிடமான இளைஞர் ஒருவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படும் ஸ்கானர் இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த இயந்திரம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அதனை எடுத்துச் சென்ற 35 வயதுடைய இளைஞரும் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.