வவுனியா – கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா, பாடசாலை அதிபர் கோ. குலேந்திரகுமார் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலையின் பிரதான நுழைவாயிலை திறந்து வைத்தார்.
கௌரவ விருந்தினர்களான வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் லெனின் அறிவழகன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் த.இராசரத்தினம் ஆகியோரால் திருவள்ளுவர், பண்டாரவன்னியன் மற்றும் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் ஆகியோரின் சிலைகள் திறந்து வைக்கப்பட்டன.
இதன்போது சாதாரண தரம், உயர்தரம் மற்றும் விளையாட்டுக்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களிற்கான கௌரவிப்புகளும் இடம்பெற்றிருந்தது.
நிகழ்வில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடாசாலை மாணவர்கள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.