வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில்,மாடசாமி கோயில் – லக்சபானா வீதிப்புனரமைப்பு பணி, இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தார்சின்னக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், முதன்மை அதிதியாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் பங்கேற்று, வீதிப்புனரமைப்பு பணியை ஆரம்பித்து வைத்தார்.

சுமார் 1.7 கிலோ மீற்றர் நீளமான வீதி, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின், 4 கோடியே 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில், காப்பற் வீதியாக அமைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.