வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், நேற்று மாலை, வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குற்றச் செயல் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சிறைச்சாலை உத்தியோகத்தர்களால், வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை வழங்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாகவே, குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில், வவுனியா பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.