வவுனியா பல்கலை கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு பேரணி

0
71

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடரும் நிலையில், வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், இன்று, கவனயீர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர்.

கல்விசாரா ஊழியர்கள், 57 ஆவது நாளாகவும் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், சத்யாக்கிரக போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், நேற்று, கொழும்பில், அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்தின் போது, நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை கண்டித்தும், தமது நியாயமான கோரிக்கையாக காணப்படுகின்ற, சம்பள உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் எனக்கோரியும், கவனயீர்ப்பு பேரணியை நடத்தியுள்ளனர்.

வவுனியா பூங்கா வீதியில் உள்ள, வவுனியா பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் பீட கட்டட தொகுதியில் இருந்து ஆரம்பித்த பேரணி, நகர் வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடைந்து, அங்கு நிறைவு பெற்றது.