வன்னியின் மகளிர் பலத்தால் கட்டியெழுப்பப்பட்ட நச்சற்ற சூழல் நேயமிக்க உற்பத்திப்பொருட்களிற்கான மாபெரும் உழவர் சந்தை, வவுனியா வைரவ புளியங்குளத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் சரத் சந்திரவினால் சந்தை திறந்து வைக்கப்பட்டது.
குளங்கள் கிராமங்கள் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்களிடம் இருந்து இடைத்தரகர் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பெருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த சந்தையானது அமையப்பெற்றுள்ளது.
குளங்கள் கிராமங்கள் மறுமலர்ச்சி திட்டத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் கனிசியஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன், யுன்டிபி நிறுவனத்தின் இணைப்பாளர் கலாநிதி கீர்த்திகா மற்றும் அரச உயர் அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.