வாகன வருமான அனுமதி பத்திரத்தின் மூலம் தேசிய எரிபொருள் விநியோக அட்டையை இன்று முதல் பெற பதிவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதேபோல், நாட்டில் நேற்றைய தினம் 746 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஞசு முறைக்கமைய எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நேற்றிரவு 8.30 மணி வரை நாட்டில் உள்ள 1,060 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஞசு முறையை ஏற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.