பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு கொலன்னாவ கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று மாலை கொலன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.எம்.மரிக்காரால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.