வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட 45 வயதுடைய ஒருவர் அத்துருகிரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் 100 இற்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்து விற்பனையில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெவ்வேறு பெயர்களில் அவர் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.