நுவரெலியா பகுதியில் உள்ள பல இடங்களுக்கு WHATSAPP மூலம் செய்திகளை பரிமாறிக்கொண்டு போதைப்பொருள் பெற்றுக்கொள்ளும் இடங்களுக்கு விநியோகித்த நுவரெலியா பொரலந்த பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான முச்சக்கரவண்டி சாரதியை (28) கைது செய்ததாக நுவரெலியா பொலிஸ் தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வரும் நீதியின் செயற்பாட்டுடன் இணைந்து இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கையின் போது கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
சோதனையின் போது, விற்பனை செய்யப்பட்ட பின்னர் மீதம் இருந்ததாக சந்தேகிக்கப்படும் 5 கிராம் 100 மில்லிகிராம் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருள் கடத்தல் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நுவரெலியாவை அண்மித்த பல பிரதேசங்களுக்கு மிக நுணுக்கமாக பல நபர்களின் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளமையும் தனது தொலைபேசித் தரவுகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்தியதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு அனுருத்த ஹக்மான மற்றும் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜயசுந்தர ஆகியோரின் பணிப்புரையின் பிரகாரம் நுவரெலியா முனஸ்தர பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி, உப பொலிஸ் பரிசோதகர் சாமர, பொலிஸ் சார்ஜன்ட் 31643 ரத்நாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள் 104444 கமகே , பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் 13399 அதிகாரிகள் எரங்கிகா ஆகியோரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபரை இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவருக்கு போதைப்பொருள் வழங்கியவர்கள் மற்றும் போதைப்பொருள் விநியோக வலையமைப்பு தொடர்பான தகவல்களை வெளிக்கொணர பொலிஸாரிடம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்படும் என பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்