வான்பரப்பை தவிர்ப்பதற்கு முன்னணி விமானங்கள் முடிவு!

0
8

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து உலகின் முன்னணி விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பை தவிர்க்க முடிவு செய்துள்ளன.

ஏர் பிரான்ஸ், பிரஞ்ச் பிளக் , ஜேர்மனியின் லுத்பான்சா உள்ளிட்ட முன்னணி விமானங்கள் மறுஅறிவித்தல் வரை இவ்வான்பரப்பை தவிர்க்க தீர்மானித்துள்ளன.

இரண்டு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் தங்களது விமானங்களுக்கு தங்கள் வான்வெளிகளை ஏற்கனவே மூடியுள்ளன. இந்நிலையில் முன்னணி சர்வதேச விமானங்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதேவேளை பிரிட்டிஷ் ஏர்வேஸ், சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் மற்றும் எமிரேட்ஸ் விமானங்கள் அரபிக் கடல் வழியாக பயணித்து, டெல்லிக்காக வடக்கு நோக்கித் திரும்புவதை விமானக் கண்காணிப்புத் தரவுகள் காட்டுவதாக ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. இப் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் இரண்டு ஏவுகணைகளை பாகிஸ்தான் பரீட்சித்துள்ள அதேநேரம், இந்தியா நேற்று நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போர் ஒத்திகைகளை முன்னெடுக்க அறிவித்திருந்தமை தெரிந்ததே.