வாரத்தில் நான்கு நாட்களே வேலை! சனத்தொகையை அதிகரிக்க ஜப்பான் புதிய திட்டம்!!

0
24

ஜப்பானில் சனத்தொகையை அதிகரிக்க அந்த நாட்டு அரசு தைரியமான முடிவை எடுத்துள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து வாரத்தில் 4 நாட்கள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் பிறப்பு விகிதம் சரிவடைந்தது. 2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 5. 6 சதவீதம் குறைந்து 7 இலட்சத்து 27,277 ஆகப் பதிவானது.

ஆகவே, ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை ஜப்பான் தலைநகர் ரோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டுவரப்பட உள்ளதாக ரோக்கியோ ஆளுநர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனால், ஊழியர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவார்கள் என்றும் அவர்கள் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும் ஆளுநர் யூரிகோ கொய்கே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.