வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு!

0
188

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை மின்சாரசபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றும் நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பான அறிவிப்பை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இன்று பி, கியூ, ஆர், எஸ், ரி, யு, வி, டபிள்யூ ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு, காலை 8.30 முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியினுள், சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்களும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும், மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
ஈ மற்றும் எப் ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு, சுழற்சி முறையில், காலை 8.30 மணி முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியினுள் 4 மணித்தியாலங்களும், மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும், மின் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, நாளை ஏ, பி, சி ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாத்திரம், சுழற்சி முறையில், காலை 9.00 மணி முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும், மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.