விசா காலாவதியான நிலையில் நாட்டில் தங்கியிருந்த நைஜிரிய பிரஜை கைது

0
121

விசா காலாவாதியான நிலையில் நாட்டில் தங்கியிருந்த நைஜீரியா பிரஜை ஒருவரை கொழும்பு, மிரிஹான பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

40 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கைதுசெய்யும்போது அவரிடமிருந்த மடிக்கணினி உள்ளிட்டவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.