விசேட தேவையுடையவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான அனுமதியை வழங்குவதற்கு போக்குவரத்து மருத்துவ நிறுவனங்களின் வைத்தியர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
விசேட தேவையுடைய சுமார் 6 இலட்சம் பேரின் உடல் தகுதிக்கு மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்காததால் இதுவரை சாரதி உரிமம் பெற முடியவில்லை.
எனவே, வைத்தியர்களின் இந்த உடன்படிக்கையுடன், அவர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகள் அடங்கிய விசேட அறிக்கையொன்று இம்மாத இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.