தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை நேற்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
8 ஆம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில், புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றில், போரின் முன்னர், விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்தினர் என்று
கருதப்படும் நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை, புதுக்குடியிருப்பு பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி, விடுதலைப்புலிகளின் முகாமாகக் காணப்பட்டது.
இந்தக் காலட்டத்தில், விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பாரியளவில் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று அமைக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு போருக்கு பின்னர், குறித்த காணியில், கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.
இந்த நிலக்கீழ் பதுங்குகுழி சுமார் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.