விடுதலைப் புலிகளை நான் அழித்ததாக சொல்வது உண்மை இல்லை!

0
122

விடுதலைப் புலிகளை தான் அழித்ததாகச் சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தீவிரவாதப் போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் காணாமல்போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்கவேண்டும் என சொல்ஹெய்ம் குறிப்பிட்டார். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.