விதுர விக்ரமநாயக்கவின் வீடு, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த ஒருவர் கைது

0
139

பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்கவின் வீடு மற்றும் அவரது தனிப்பட்ட சொத்துகள், காணி, அரச வாகனம் என்பவற்றுக்கு சேதம் விளைவித்துடன் தீமூட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

களுத்துறை இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை ஹொரண பொலிஸ் பிரிவில் வைத்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.