போர்த்துக்கலில் இராணு விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்ட போது இரண்டு சிறிய ரக விமானங்கள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய விமானத்தின் விமானி காயமடைந்துள்ளார்.

தெற்கு போர்த்துக்கலில் 11 ஆவது வான்படைப்பிரிவின் விமான சாகசம் நேற்று இடம்பெற்றது.போர்த்துக்கல் விமானப்படையின் 72 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த சாகச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக போர்த்துக்கல் பாதுகாப்பு அமைச்சர் நுனோ மெலோ தெரிவித்துள்ளார்.
