உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான விராட் கோலிக்கு மெழுகுச் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நஹர்கார் அருங்காட்சியகத்தில் குறித்த சிலை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிலை 5.9 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.