விருதுகளை குவித்த ‘ஓபன்ஹெய்மர்

0
114

ஆஸ்கர் விருது போன்று ஒவ்வொரு ஆண்டும் பல துறைகளில் சாதனை படைத்த படங்களுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இவ்வாண்டு ‘Hollywood Foreign Press Association’ சார்பில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். நடிகரும் நகைச்சுவை கலைஞருமான ஜோ கோய் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘ஓபன்ஹெய்மர்’ திரைப்படத்துக்கு சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.