ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரும் தேவையான 50 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெறவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோரைத் தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் போட்டியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.
ஒரு வேட்பாளர் எனும் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிராத நிலையில் தேர்தல் விதிகளுக்கு அமைய அவர்களுக்கான விருப்பு வாக்குகளை எண்ணி, அதிக வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படவுள்ளார்.
இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கொழும்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.