பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைக் குறைப்பு, பொதுமக்களை சென்றடைய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் அதிகரித்தபோது, அதிகரிக்கப்பட்ட பொருட்கள் சேவைகளின் விலை, பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில், குறைக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொருட்கள் சேவைகளின் விலை சற்று குறைவடைந்தாலும், உற்பத்தியாளர்கள் அவற்றில் பாரிய இலாபங்களை பெற்றுக்கொள்வதாகவும் கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி குறிப்பிட்டார்.