பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், அந்நாட்டு அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ்இ 5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் நிலம் தொடர்பான ரூ.8600 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகையை தள்ளுபடி செய்திருக்கிறார்.
1986 ஆம் ஆண்டு மக்கள் கிளர்ச்சியில் மார்கோஸின் தந்தை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அது நடந்து ஒரு வருடத்திற்கு பிறகு இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ், நாட்டின் நிலப்பரப்பில் 16% அளவிற்கு சுமார் 50 லட்சம் ஹெக்டேர் நிலங்கள்இ கிட்டத்தட்ட 30 லட்சம் நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.