26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு !

பெரும்போக நெற்செய்கைக்காக நிலத்தை தயார்ப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.எதிர்வரும் பெரும்போகத்திற்காக கால்வாய்களை தூய்மைப்படுத்தல், வாய்க்கால்களை தூர் வாருதல், களைகளை பிடுங்குதல் மற்றும் நிலத்தை தயார்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு அறிக்கை ஒன்றின் ஊடாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.இது தொடர்பில் விவசாயிகளை தௌிவுபடுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விவசாய திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.வானிலை முன்னறிவிப்பின் பிரகாரம், இம்முறை பெரும்போகத்தில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும், அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வறட்சியான காலநிலை நிலவக்கூடும் எனவும், இயன்றளவு நீரை முகாமைத்துவப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை, வறட்சியால் இம்முறை சிறுபோகத்தில் 59,073 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles