பதுளை ஹாலி-எல ஊவா தீகல்ல என்ற பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 15 அடி உயரமான கஞ்ச செடியுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹாலி-எல பொலிஸார் நேற்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர். ஊவா தீகல்ல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில்இ மேற்கொண்ட தேடுதலில் வீட்டுத் தோட்டத்திற்கு மத்தியில் மானா புற்களுக்கு இடையில் இந்த கஞ்சா செடியை கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர் பதுளை நீதவான்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.