வீதியால் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு…!

0
83

வவுனியா, கோயில்குளம் பகுதியில் நேற்று வீதியால் சென்ற பெண்ணின் சங்கிலி மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர், ஒரு புவுண் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.


சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிஸார், பொது மக்கள் நகைகளுடன் வீதியில் செல்லும் போது அவதானமாக செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.