ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக எம்.ஜீ. வீரசேன கமகே, சபாநாயகர் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வு காலை 9.30 மணிக்கு ஆரம்பமானபோது வீரசேன கமகேவின் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேன தனது 69 ஆவது வயதில் அண்மையில் காலமானார். அதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய வெற்றிடம் காணப்படுவதாக நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே அந்த வெற்றிடத்துக்கு வீரசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.