Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
கண்டி – அக்குரனை பகுதியில் வெடிப்பொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு பேர், அக்குரணை நகரில் வைத்து நபர் ஒருவருக்கு பொதியொன்றை வழங்கியுள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த பொலிஸார் குறித்த பொதியை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.இதன்போது, அந்த பொதியிலிருந்த எஸ்.ஜீ ரக 7 தோட்டாக்களும், ரி 56 துப்பாக்கி பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்களும், 5 வெற்றுத் தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அக்குரனை, இறம்பொடை மற்றும் அட்டபாகை பகுதியைச் சேரந்த 39 முதல் 48 வயதுக்கிடைப்பட்டவர்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.அவர்கள் இன்றைய தினம் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.